நடக்கவிருக்கும் நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளிலிருந்து 115 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள் ** ஆஸ்திரேலியா - 10; நியுசீலாந் 2.

SYDNEY, AUSTRALIA, April 2, 2024 /EINPresswire.com/ -- எதிர்வரும் வைகாசி 5ம் தேதி (05/05/2024) அன்று நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்கான புதியஅங்கத்தவர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் உலகின் பலநாடுகளிலும் இடம் பெற உள்ளன.

ஆஸ்திரேலியா, நியுசீலாந்திற்கான (Australia/New-Zealand) தேர்தலில் முறையே 10 உறுப்பினர்களும், 2 உறுப்பினர்களும்நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களாகதெரிவுகள் இடம்பெறும்.

ஆஸ்திரேலியாவில் ஐந்து (5) தேர்தல் மாவட்டங்களிலிருந்தும்மொத்தம் 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். நியுசீலாந்தில் இருந்து 02 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

அண்மை காலங்களில், உலகின் பல நாடுகளின்பாராளுமன்றங்களில் பெண்கள், இளையோருக்கான ஆசனங்கள்அதிகரிக்கப்பட்டு வருவதனை பல நாடுகளிலும் நாம்காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் தேர்தலிலும் பெண்கள், இளையோரின்பங்களிப்பினை ஊக்குவிப்பதற்காக பெண்களுக்குகுறைந்தபட்சம் 25 வீதம் (25%) ஆசனங்களும், இளையோருக்கு25வீதம் (25%) ஆசனங்களும் ஒதுக்கப்-பட்டுள்ளன. குறிப்பாகஆஸ்திரேலியா, நியுசீலாந்தில் பிறந்து வளர்ந்த அல்லது சிறுவயதிலேயே ஆஸ்திரேலியா, நியுசீலாந்திற்கு புலம்பெயர்ந்து வந்தஇளையோரின் பங்களிப்பினை மிகவும் வரவேற்கிறோம்.

* ஆஸ்திரேலியாவிற்கான (Australia) 5 தேர்தல் மாவட்டங்கள்பின்வருமாறு:

1) தேர்தல் மாவட்டம் 1: நியூ சவுத்வேல்ஸ் (NSW State, Australia) மாநிலம்.
இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்கள்தெரிவு செய்யப்படவுள்ளனர்.

2) தேர்தல் மாவட்டம் 2: விக்டோரியா மாநிலம் (Victoria State, Australia)
இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்கள்தெரிவு செய்யப்படவுள்ளனர்.

3) தேர்தல் மாவட்டம் 3: மேற்கு ஆஸ்திரேலியா / தெற்குஆஸ்திரேலியா மாநிலங்கள் (Western Australia & South Australia)
இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 1 உறுப்பினர்தெரிவு செய்யப்படவுள்ளார்.

4) தேர்தல் மாவட்டம் 4: டஸ்மேனியா / ஆஸ்திரேலியா தலைநகர்பிரதேசம் (Tasmania & Australian Capital Territory (ACT))
இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 1 உறுப்பினர்தெரிவு செய்யப்படவுள்ளார்.

5) தேர்தல் மாவட்டம் 5: குயின்ஸ்லாந்து மாநிலம் / வடக்கு பிரதேசம்(Queensland & Northern Territory (NT))
இந்த தேர்தல் மாவட்டத்திலிருந்து 1 உறுப்பினர்தெரிவு செய்யப்படவுள்ளார்.

* நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி நள்ளிரவு வரை வேட்புமனுதாக்கல் ஏற்றுக்கொள்ளப்படும்.

எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள் ஆஸ்திரேலியா, நியுசீலாந்து தேர்தல் ஆணையத்தின் குறித்த மின்னஞ்சல் election.commissioner@tgte.org அல்லது kanagas.gopal202@outlook.com வழியே பெற்றுக்கொள்ளலாம்.

* Email: election.commissioner@tgte.org அல்லது kanagas.gopal202@outlook.com

மேலதிக விபரங்களுக்கு : www.tgte-us.org / www.tgte.org

நன்றி .

திரு. க. கோபலக்கிருஷ்ணன்
தேர்தல் ஆணையாளர் - ஆஸ்திரேலியா, நியுசீலாந்து

திரு. க. கோபலக்கிருஷ்ணன்
Election Commissioner
election.commissioner@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
InstagramABN Newswire
ABN Newswire This Page Viewed:  (Last 7 Days: 9) (Last 30 Days: 46) (Since Published: 171)